ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 17 உக்ரேனியர்கள் பலி! 

17 Ukrainians killed in Russian attack
17 Ukrainians killed in Russian attack

க்ரேனில் உள்ள சந்தை மீது ரஷ்யா நடத்திய கோரமான ஏவுகணை தாக்குதலில் சிக்கி 17 உக்கிரேனியர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 

கடந்த 18 மாதங்களுக்கும் மேலாக உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரேனும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் உதவியுடன் ரஷ்யாவை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தொடக்கத்தில் ரஷ்யா எளிதாக உக்கிரேனைக் கைப்பற்றி விடலாம் என நினைத்தாலும், பல நாடுகளின் ஆயுத உதவியால் இன்றுவரை உக்கிரேன் தோல்வி அடையாமல் போராடி வருகிறது. 

இந்நிலையில் உக்ரின் டோனட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சந்தை பகுதியில், திடீரென ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. இதில் அந்த சந்தை மட்டுமின்றி அருகில் இருந்த பல கட்டடங்கள், கடைகள், மருந்தகங்கள் போன்றவையும் சேதமடைந்தன. இந்த கொடூர தாக்குதலில் குழந்தைகள் உட்பட மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர். இதில் 33 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு தன் கண்டனத்தைத் தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என அச்சம் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ரஷ்யா மிகக் கொடூரமான முறையில் நடத்தி இருப்பதாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கூட்டமைப்பு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். 

இத்துடன் அமெரிக்க வெளியூர்வுத் துறை அமைச்சரும் உக்கிரேனுக்கு வந்துள்ள நிலையில், இந்த தாக்குதலால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும் போர் தளவாடங்கள் வாங்க, உக்ரேனுக்கு 8,322 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com