பீகாரில் 1750 கோடி பாலம் திடீரென இடிந்து விழுந்தது!

பீகாரில் 1750 கோடி பாலம் திடீரென இடிந்து விழுந்தது!

பீகார் மாநிலம் கங்கை நதிக்கு மேல் கட்டுமானப் பணியிலிருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து இருந்தது. கட்டுமானப் பணியில் இருந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பீகார் மாநிலம், பாகல்பூரில் இருந்து ககாரியாவை இணைக்கும் விதமாக, 3.1 கி.மீ., நீளத்துக்கு, பாலம் கட்ட, 2014 ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது. பாகல்பூரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலம் திடீரென உடைந்து, அதன் காரணமாக சுமார் 100 மீட்டர் கீழே உள்ள ஆற்றில் விழுந்தது. கங்கை நதியில் கட்டப்பட்ட இந்த பாலத்தின் மொத்த செலவு 1750 கோடி ரூபாய்,தண்ணீரில் விழுந்தது. பாகல்பூரில் உள்ள சுல்தாங்கஞ்ச் என்ற இடத்தில் கட்டுமானப் பணியில் இருந்த நான்கு வழிப் பாலம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இப்பாலம் அப்பகுதியில் வீசிய, காற்று மற்றும் மழையால் இடிந்து விழுந்துள்ளது. இதில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மோசமான வானிலையால், பாலத்தின் 4 மற்றும் 6வது தூண்களுக்கு இடையே, 100 அடி தூரத்துக்குப் பாலம் இடிந்து விழுந்தது.

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் தருணத்தை அப்பகுதி மக்கள் வீடியோவில் பதிவு செய்தனர். பாலம் இடிந்து விழுவது இது இரண்டாவது முறையாகும்.

இந்த சம்பவம் தொடர்பாக 'புல் நிர்மான் நிகாம்' நிறுவனத்திடம் உள்ளூர் நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளதாக டிடிசி பகல்பூர் குமார் அனுராக் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com