
நிறுவனம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை : தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்: 1794
பணி : Field Assistant (கள உதவியாளர்)
பணியிடம் : தமிழ்நாடு
ஆரம்ப நாள் : 03.09.2025
கடைசி நாள் : 12.07.2025
பதவி - Field Assistant
காலியிடங்கள்: 1794
சம்பளம் : Rs.18,800 – 59,900/-
கல்வி தகுதி : Must possess National Trade Certificate / National Apprenticeship Certificate awarded by the National Council for Training and Vocational Trade in any one of the following trades: Electrician (or) Wireman (or) Electrical Trade under Centre of Excellence Scheme
வயது வரம்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) Field Assistant பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. இதர பிரிவினர் (SC, ST, BC, MBC அல்லாதவர்கள்)
அதிகபட்ச வயது: 32 (32 வயதை பூர்த்தி செய்திருக்கக் கூடாது).
மாற்றுத்திறனாளிகள் (PwBD): 42 வயது வரை.
முன்னாள் இராணுவத்தினர்: 50 வயது வரை.
ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை.
2. BC(OBCM)s, BCMs, MBCs/DCs, SCs, SC(A)s மற்றும் STs பிரிவினர்
அதிகபட்ச வயது:
BC (OBCM)s, BCMs, MBCs/DCs: 34 வயது வரை.
SCs, SC(A)s மற்றும் STs: 37 வயது வரை.
ஆதரவற்ற விதவைகள்: 37 வயது வரை.
மாற்றுத்திறனாளிகள் (PwBD):
BC (OBCM)s, BCMs, MBCs/DCs: 44 வயது வரை.
SCs, SC(A)s மற்றும் STs: 47 வயது வரை.
முன்னாள் இராணுவத்தினர்: 55 வயது வரை.
சம்பள விவரங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) Field Assistant பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு, ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை மாதச் சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
One Time Registration Fee – Rs.150/-
Examination Fee – Rs.100/-
Fee Concession:
Ex-Servicemen – Two Free Chances
BCM, BC, MBC / DC – Three Free Chances
Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption
தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் பின்வரும் செயல்முறைகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்:
எழுத்துத் தேர்வு (Written Examination)
சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
உடல் தகுதித் தேர்வு (Physical Test)
தேர்வு நடைபெறும் தேதி:
Paper I: 16.11.2025, 09.30 AM to 12.30 PM
Paper II: 16.11.2025, 02.30 PM to 05.30 PM
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்தப் பணிக்கு www.tnpscexams.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் திருத்தம் இருந்தால் அக்டோபர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரையில் விண்ணப்பதாரர்கள் திருத்தங்களை செய்துக் கொள்ளலாம்.
தேர்வு எப்போது?
இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வானது எழுத்துத் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 என இரண்டு தேர்வுகளாக நடத்தப்படும்.
தமிழ் தகுதித் தேர்வு, பொது அறிவு, திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுத் தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், தொழிற்பிரிவு மின்பணியாளர் மற்றும் கம்பியாளர் பிரிவு தேர்வு மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரையிலும் நடைபெறும். தமிழ் தகுதித் தேர்வில் 60 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பிற பகுதிகள் திருத்தப்படும்.
எழுத்துத் தேர்வுக்கு அடுத்தகட்டமாக உடற்தகுதித் தேர்வு நடத்தப்படும். இதில் கம்பம் ஏறுதல், குறுக்கு கை பொருத்துதல் ஆகிய அம்சங்கள் இடம்பெறும். உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் மட்டுமே அடுத்தகட்ட தெரிவு முறைக்கு கருத்தில் கொள்ளப்படுவார்கள்.
இதில், சிறந்த விளையாட்டு வீரர்கள் இடஒதுக்கீட்டிற்கான பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்றும், தற்போது அளிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படலாம் எனவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.