முன்னாள் கேப்டன் வீட்டில் ஒன்று கூடிய 1983 உலகக் கோப்பை வீரர்கள்...

முன்னாள் கேப்டன் வீட்டில் ஒன்று கூடிய 1983 உலகக் கோப்பை வீரர்கள்...
Published on

1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பை முற்றிலும் யாரும் எதிர்பார்க்காத விதமான முடிவுகளை அளித்தது. இதிலும் 60 ஓவர் அடிப்படையிலேயே போட்டி நடத்தப்பட்டது. 15 மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெற்றன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. ஏ பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூஸிலாந்து இலங்கையும், பி. பிரிவில் மே.இ.தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகளும் இடம் பெற்றன. உலக கோப்டை இறுதிப் போட்டியில் மே.இ.தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி முதன் முறையாக உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.

சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி ஆகியோர் டெல்லியில் உள்ள கபில்தேவ் வீட்டுக்கு சென்று 1983 உலக கோப்பை வெற்றியை கொண்டாடி நேரத்தை செலவிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின் புகைப்படங்களை சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்த்ரி ஆகியோர் தங்களது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். இவர்களுடன் மதன் லால், கிருதி அசாத், சுனில் வல்சான் ஆகிய முன்னாள் வீரர்களும் சென்றுள்ளனர்.

"1983 உலகக் கோப்பை அணி கேப்டன் கபில் தேவ் வீட்டில் இந்த அற்புதமான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. டெல்லி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றி சிறப்பான டின்னர், உரையாடல்கள் மூலம் கொண்டாடப்பட்டது. சிறப்பான மாலை பொழுதாக அமைந்தது." என்று இந்த சந்திப்பு குறித்து கவாஸ்கர் தனது இன்ஸ்டா 1983 உலக கோப்பை வென்றதை மலரும் நினைவுகளாக பதிவிட்டுள்ளனர்.

சில குறிப்புகள்

1983 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் முதலில் ஆடுமாறு இந்தியாவை பணித்தது. அப்போது உலகிலேயே சிறந்த வேகப்பந்து வீச்சைக் கொண்டிருந்தது மே.இ.தீவுகள். ஸ்ரீகாந்த் 38, அமர்நாத் 26 ரன்களை சேர்த்தனர். மே.இ.தீவுகளின் ஆன்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் இந்தியாவை நிலைகுலையச் செய்தனர். 54,4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.

இதற்கிடையே பருவநிலை, பிட்ச் சூழ்நிலையை அருமையாக பயன்படுத்திக் கொண்ட இந்திய பவுலர்கள் அற்புதமான பந்துவீச்சில் மே..தீவுகள் 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மதன்லால், அமர்நாத் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் அடித்த ஷாட்டை 18 மீ தூரம் ஓடிச் சென்று அற்புதமாக கேட்ச் பிடித்தார் கபில் தேவ். அமர்நாத் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இறுதியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வென்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்தது.இந்தியா.

அந்த உலகக் கோப்பை வெற்றியானது முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணி இல்லாமல், வேறொரு அணி பெற்ற முதல் வெற்றியாக அமைந்தது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தி வரும் இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைராகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com