2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை: உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை சாதனை!

2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை: உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகை சாதனை!

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ரூபாய் 2 கோடி அளவிற்கு ஆடுகள் விற்பனையானதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதூறித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆட்டுச் சந்தை வியாபரிகள் தெரிவித்ததாவது:

பொங்கல் பண்டிகையையை முன்னிட்டு இன்று இந்த ஆட்டுச் சந்தையில் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இவற்றை பல்வேறு ஊர்களிலிருந்து வாகனங்களில் வந்து பலரும் வாங்கிச்சென்றனர். அந்த வகையில் இன்று மூன்றே மணி நேரத்தில் 2 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனையானது. லாரி, மினி லாரி மினி டெம்போ என ஏராளமான வாகனங்களில் வந்து ஆடுகளை அவர்கள் வாங்கி சென்றதால் உளுந்தூர்பேட்டை சேலம் நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மற்ற சமயங்களைவிட ஆடுகள் அதிகளவு விற்பனைக்கு வந்ததும் விலை குறைவாக இருந்ததும் காரணமாக இன்று இந்தளவு விறபனையானது.

இவ்வாறு ஆட்டுச் சந்தை வியாபரிகள் தெரிவித்தனர்.

logo
Kalki Online
kalkionline.com