தாமிர பரணி ஆற்றில், நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிர பரணி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
” திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், கீழத்திருவேங்கடநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி என்பவரது வீட்டிற்கு சென்றிருந்த சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம், த/பெ.பாலகிருஷ்ணன் (வயது 25) மற்றும் அருண்குமார், த/பெ.ஆறுமுகம் (வயது 23) ஆகியோர் நண்பர்களுடன் நேற்று (8.5.2023) மதியம் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நீர்நிலைகளை பாதுகாப்புடன் விழிப்புணர்வினை பொதுமக்களிடையே தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு பயன்படுத்த வேண்டுமென்ற துறைகள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்படுத்தவேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் போதிய கவனம் செலுத்தி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்.