20 நடமாடும் டீக்கடைகள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு!

20 நடமாடும் டீக்கடைகள்: தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு!

Published on

தமிழகத்தில் நடமாடும் 20 டீ விற்பனைக் கடைகளை முதல்வர் மு..ஸ்டாலின் கொடியசைத்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பிலான இந்த 20 நடமாடும் டீ விற்பனை கடைகள் துவக்க விழாவில், Indcoserve நிறுவனத் தலைவரான் சுப்ரியா சாகு ஐ..எஸ் பேசியதாவது:

தேயிலை விவசாயிகளின் நலன், Indcoserve நிறுவனத்தின் வியாபாரத்தை விரிவாக்குதல், பழங்குடி மக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளித்தல் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் இந்த நடமாடும் டீக்கடைகள் திறக்கப்பட்டுள்லன. முதற்கட்டமாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இக்கடைகள் செய்லபடத் துவங்கும். இந்த மொபைல் கடைகளில் டீ, காபி மற்றும் சிறு தானிய உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து மாவட்டங்களுக்கும் இதன் சேவை விரிவாக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com