டினிப்ரோ அணையிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் 24 கிராமங்கள் பாதிப்பு: உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது !

டினிப்ரோ அணையிலிருந்து  தண்ணீர் வெளியேறியதால் 24 கிராமங்கள் பாதிப்பு: உயிரியல் பூங்கா வெள்ளத்தில் மூழ்கியது !

டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய அணையின் ஒரு பகுதி உடைந்ததால் நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக வந்த செய்திகள் பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தி வருகிறது.

டினிப்ரோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் ஒரு பகுதி உடைந்ததால் சுமார் 18 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் வெளியேறியது. இதையடுத்து கெர்சன், கக்கோவ்கா பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உக்ரைன் அரசு அறிவுறுத்தியது.

மேலும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீர் பல நகரங்கள், கிராமங்களுக்குள் புகுந்தது. பல அடி உயரத்துக்கு சென்ற வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மூழ்கின. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரால் 24 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.

அங்கிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 17 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். பலர் வீட்டின் கூரை மீது அமர்ந்து இருந்தனர். அவர்களை படகில் சென்று மீட்பு குழுவினர் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. அணை உடைந்துள்ளதால் ரஷிய மற்றும் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சுமார் 42 ஆயிரம் பேர் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

இந்நிலையில் அணையில் இருந்து வெளியேறிய வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.இதற்கிடையே ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள நதிக்கரையில் இருக்கும் கஸ்கோவா டிப்ரோவா உயிரியல் பூங்கா முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்கிருந்த 300 விலங்குகளும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் பகுதியில் கக்கோவ்கா அணை உடைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நீர் மின் நிலையமும் சேதம் அடைந்தது. அணை மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் தாக்குதல் நடத்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com