கால்நடைகளின் அவசர மருத்துவ உதவிக்கான தொலைபேசி எண் 1962. இந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டால் வீட்டுக் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி உடனே வீடு தேடிவரும். இப்படி கால்நடைகளின் மருத்துவ சேவைக்காக, மத்திய அரசின் உதவியோடு மாநில அரசு சார்பில் 250 கால்நடை அவசர உதவி ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட்டன.
சுமார் 39 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இந்தப் புதிய 250 கால்நடை மருத்துவ நடமாடும் ஆம்புலன்ஸ்கள் திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கம் அருகே இருளம்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டு கேட்பாரற்று கிடக்கின்றன. இப்படி இந்த ஆம்புலன்ஸ்கள் பயன்பாடின்றி கிடப்பதால் துருப்பிடித்து பாழாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் நீயா நானா மோதல் போக்கே ஆம்புலன்ஸ்களின் இந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, மத்திய, மாநில அரசுகள் தங்கள் இரு தரப்பிலும் கொடுக்கப்பட வேண்டிய நிதி கொடுக்கப்படாததால்தான் இந்த கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாடு இன்றி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்துப் பேசிய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ‘நீண்ட நாட்களாக நிற்கும் இந்த கால்நடை அம்புலன்ஸ்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்து இருப்பதாகக் கூறப்படுகிறது.