தமிழகத்தில் 26 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளது! மின் வாரியம் அறிவிப்பு!

EB
EB
Published on

தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன் பிறகு தான் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 26 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு முகாம்கள் நேற்று முன்தினம் தொடங்கின. இந்நிலையில், சிறப்பு முகாம் மூலமாக நேற்று மட்டும் 3 லட்சத்து 69 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வாயிலாக 3 லட்சத்து 11 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக சுமார் 26 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.மேலும், மின் மானியம் பெறுவதற்கு மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை சிறப்பு முகாம்கள் செயல்படும். மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், மின் கட்டணம் செலுத்துவதற்கான இணையதளத்தில், ஆதார் எண்ணை இணைப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com