ரூ.27 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! மூன்று பேர் கைது!

ரூ.27 லட்சம் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்! மூன்று பேர் கைது!

பரேலி: இங்குள்ள போஜிபுரா பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ. 27 லட்சம் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் (எஃப்ஐசிஎன்) கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

ஹர்வன்சி சிங் என்ற சோனு, குர்னாம் மற்றும் சதாம் உசேன் ஆகியோர் வியாழக்கிழமை பர்பரா குஜாரியா கிராமத்தில் இருந்து கிடைத்த ஒரு ரகசிய தகவலை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

மூவரிடம் இருந்தும் மொத்தமாக ரூ.27 லட்சம் FICN இருந்தது, அதாவது போலி இந்திய ரூபாய் நோட்டுகள். அவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

பரேலியின் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அகிலேஷ் சௌராசியா கூறுகையில், விசாரணையின் போது குற்றவாளிகளுக்கு நேபாளம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது என்று கூறினார்.

மேலும் அவர்களுக்கு வேறு எங்கெல்லாம் தொடர்புகள் இருந்தன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அவர். மேலும் விஷேச அதிரடிப்படை மற்றும் உள்ளூர் போலிஸார் இணைந்த கூட்டுக் குழுவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

இந்த கும்பல் ரூ.1 லட்சம் உண்மையான நோட்டுகளுக்கு பதிலாக ரூ.3 லட்சம் எஃப்ஐசிஎன் வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றும் அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com