அக்டோபர் 1 முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத வரி. 

அக்டோபர் 1 முதல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத வரி. 

ணையத்தில் விளையாடப்படும் சூதாட்டம், கேசினோ மற்றும் குதிரைப் பந்தயம் போன்றவற்றிற்கு 28 சதவீதம் வரிவிதிப்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. 

இந்தியாவில் பல்வேறு சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. அவற்றில் அவ்வப்போது அதிரடி மாற்றங்கள் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி கொண்டு வருவதற்கு முன்னதாக 17 விதமான வரிகள் மட்டுமே இருந்த நிலையில், அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜூலை 1ம் தேதி முதல் பொதுவாக ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக விமர்சனம் இருந்தது. இதையடுத்து அந்த இழப்புகளை ஈடு செய்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. 

சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து மாநில அமைச்சர்களும், நிதித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு ரம்மி, குதிரைப் பந்தயம், கேசினோ போன்ற இணைய விளையாட்டுகளுக்கு 28% வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டது. இது அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர். 

இணைய விளையாட்டுகளுக்கு ஜிஎஸ்டி விதிப்பை நடைமுறைப்படுத்திய பிறகு, ஆறு மாதங்கள் கழித்து இதை மறுபரிசீலனை செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்யும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கு பல மாநிலங்களில் இணைய விளையாட்டை நடத்தி வரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் நான் இந்திய நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வரி விதிப்புக்கு பலர் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்ததால், 6 மாதங்கள் கழித்து இதை மறுபரிசீலனை செய்வோம் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய வருவாய்த்துறை செயலாளர் சஞ்சய் மல்கோத்ரா, "ஏற்கனவே ஆன்லைன் விளையாட்டு களுக்கு ஜிஎஸ்டி இருக்கிறது. ஆனால் அது இன்னும் சட்டப்பூர்வமாகப்படவில்லை. ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது என்பதற்காக ஆன்லைன் விளையாட்டுகள் சட்டபூர்வமானது இல்லை என்று சொல்ல முடியாது.  அது எப்போதுமே சட்டத்திற்கு புறம்பானது தான். தற்போது ஆன்லைன் விளையாட்டு களுக்கு வரி விதிக்கப்பட்டதால் அதை தடை செய்த மாநிலங்களில் இணைய விளையாட்டு சட்டபூர்வமாக மாறிவிடும் என்று சொல்ல முடியாது. எந்தெந்த மாநிலங்களிலெல்லாம் அதற்கு தடை இருக்கிறதோ, அது அப்படியே தொடரும்" என அவர் தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com