ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி!

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி
Published on

ந்தியாவில் விளையாடப்படும் ஆன்லைன் மற்றும் குதிரை பந்தயம், கேசினோ போன்ற விளையாட்டுகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இணைய வழியாகவும், பல்வேறு விளையாட்டுகளின் மூலம் சூதாட்டப் போட்டிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், அவற்றைக் கண்காணிக்கவும், அவற்றைப் பதிவு செய்யவும் வழி வகுக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் முறைக்குள் இதுபோன்ற விளையாட்டுகள் கொண்டுவரப்பட உள்ளன.

‘ஆன்லைன் விளையாட்டுகள், கூடங்களின் நடைபெறும் கேசினோக்கள், குதிரைப் பந்தயங்கள் ஆகிய விளையாட்டுகளுக்கு 28 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்க வேண்டும்’ என்று கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்டி கவுன்சிலிங் முடிவின்படி இதற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி உள்ளது.

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தியா முழுவதும் நடைபெறும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தயங்கள், கேசினோக்கள் ஆகியவை பதிவு செய்யப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், விளையாட்டுக்கான முழு முகமை மதிப்பிலிருந்து 28 சதவிகிதத்தை ஜிஎஸ்டி வரியாகக் கட்ட வேண்டும். இதற்காக மத்திய ஜிஎஸ்டி மற்றும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளது. இந்த சட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

அதேசமயம், வெளிநாட்டைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு தளங்களை ஜிஎஸ்டியில் பதிவு செய்யவும் வரி செலுத்த முன்வராதபட்சத்தில் அவற்றுக்கான அனுமதியை மறுப்பதற்கும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுக்கப்படும் என்றும், தனிநபருக்கான அதிக அளவிலான இழப்பீடு குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com