

சென்னையில் மொபைல் போன் பழுது நீக்கும் (skill development) பயிற்சி மூலம் சுயதொழில் (self-employment) வாய்ப்பை பெற முடியும் எனும் அரசு திட்டம் சுய தொழிலில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு காதில் தேனாகப் பாயும் இனிய செய்தியாக உள்ளது.
தற்போது படித்து விட்டு வேலை வாய்ப்பு தேடி அலையும் இளைஞர்கள் இந்தப் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றால் யாரிடமும் கைகட்டி நிற்காமல் தாங்களே சுயமாக தொழில் துவங்கி சாதிக்க வழிவகுக்கிறது தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN) வழங்கும் இந்தப் பயிற்சி.
இன்று மொபைல் இல்லாத நபர்களை காணமுடியாது. மொபைல் திடீரென பழுதானாலோ அல்லது வேறு மொபைல் குறித்த சர்வீஸ் வேண்டும் என்றாலும் உடனே நாம் செல்வது மொபைல் சர்வீஸ் சென்டர்களுக்குத்தான். மூலைக்கு மூலை இந்த சென்டர்கள் இருந்தாலும் இன்னும் தேவைகள் அதிகரித்தே வருகிறது. அதன் அடிப்படையில் இந்த பயிற்சி நிச்சயம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் .இப்பயிற்சியின் நோக்கம், தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.
பயிற்சி எங்கு யாரால்..
சென்னையில் மூன்று நாட்கள் நடைபெறும் பிரத்யேகமான "மொபைல் போன் பழுது நீக்கம் மற்றும் சேவைப்பயிற்சி" (Mobile Phone Repairing & Servicing Course) வழங்க உள்ளது தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII-TN).
பயிற்சியின் நோக்கம் :
இன்றைய டிஜிட்டல் உலகில் மொபைல் பயன்பாடு தவிர்க்க முடியாதது. இத்துறை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவையும் அதிகம். பங்கேற்பாளர்களுக்கு மொபைல் போன் ஹார்ட்வேர் மற்றும் சிப் லெவல் சர்வீஸ் (Chip Level Service) துறையில் சர்வதேசத் தரத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப அறிவை வழங்குவதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எவராயினும் விண்ணப்பிக்கலாம்.
ஐடிஐ (ITI), பாலிடெக்னிக் மாணவர்கள், வேலை தேடும் இளைஞர்கள், சுயதொழில் ஆர்வலர்கள், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் என அனைவருக்கும் இப்பயிற்சி பெறத் தகுதி உள்ளது.
பயிற்சிய நிறைவில் பங்கேற்பாளர்களுக்கான வாய்ப்புகள் :
சேவை மையங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களில் மொபைல் டெக்னீஷியன் ( Technician)பணிகள்,
ஸ்டோர்கள்/சேவை(Service Centre) சென்டர்-களில் பழுது பராமரிப்பு பார்ட் டைம் அடிப்படையில் பணி வசதி வருமானம்,
சுய தொழிலாக சொந்தமாக(Self-Employment) மொபைல் சர்வீஸ் கடை திறக்கும் வாய்ப்பு. பாதுகாப்பான மொபைல் சாதனங்கள் வாங்கி புதுப்பிக்கும் சேவைகளை கூட வழங்கலாம்.
பயிற்சி காலம் மற்றும் பாடத்திட்டம்:
3 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டு, செய்முறை விளக்கங்களுடன் கற்பிக்கப்படும்:
முதல் நாள்: மொபைல் டெக்னாலஜி குறித்து .அடிப்படை அறிமுகம் மற்றும் பாகங்கள் விளக்கம், உள்ள. (உ.தா: ஆண்ட்ராய்டு மற்றும் பல்வேறு சிப்செட் (Chipset) வகைகள் பற்றிய விளக்கம்)
இரண்டாம் நாள்: சிப் லெவல் (Chip Level) மற்றும் மதர்போர்டு குறித்த விரிவான பயிற்சிகள் (உ.தா : Soldering நுட்பங்கள் மற்றும் மல்டிமீட்டர் (Multimeter) மூலம் பழுதுகளைக் கண்டறிதல்) ,
மூன்றாம் நாள்: சாப்ட்வேர் மற்றும் அட்வான்ஸ்டு டிரேசிங் (Tracing) உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி.(உ தா: நெட்வொர்க் செக்ஷன் (PA, WTR) கண்காணிப்பு மற்றும் சரிசெய்தல்.)
அரசு மானியம் மற்றும் சான்றிதழ்:
வெற்றிகரமாகப் பயிற்சியை முடிக்கும் பங்கேற்பாளர்களுக்குத் தமிழ்நாடு அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படும். அத்துடன் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.
பயிற்சி நாட்கள்: 25.02.2026 முதல் 27.02.2026 வரை (3 நாட்கள்)
நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
இடம்: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032.
குறிப்பாக ஆர்வமுள்ள வெளியூர் மாணவர்கள் முன்கூட்டியே விண்ணப்பித்தால் குறைந்த வாடகையில் தங்கும் விடுதி வசதியும் உள்ளது .
இந்த அரிய வாய்ப்பினை தவறவிடாமல் ஆர்வமுள்ளவர்கள் www.editn.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து வருங்காலத்தில் தொழில்முனைவோராக சுய வருமானம் பெற்று மகிழுங்கள்.