#BREAKING : சிபிஎஸ்சி பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது!

CBSE school 3 Language
CBSE schoolimage credit: The news Minute
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) தற்போது ஒரு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மூன்று மொழிக் கொள்கையை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டம் நாட்டில் உள்ள அனைத்து சிபிஎஸ்சி பள்ளிகளிலும் வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

கட்டாயமாகும் மூன்று மொழிக் கொள்கை:

சிபிஎஸ்சி புதிதாக கொண்டுவந்துள்ள கல்விக் கொள்கையின்படி ​9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் 3 மொழிகள் கற்பதை கட்டாயமாக்கி உள்ளது. இந்தப் பாடக் கொள்கை மற்றும் முக்கிய முக்கிய பாடங்களுடன் மொழிகள் படிப்பதையும் கட்டாயமாக்கி உள்ளது.

புதிதாக கொண்டுவரப்பட்ட இந்த மும்மொழி கொள்கையில் இந்திய மொழிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இதன்படி மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் கண்டிப்பாக இந்தியத் தாய்மொழிகளாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் மொழிகளாகவோ இருக்க வேண்டும் என்பது புதிய விதியாகும். இதனால் மாணவர்கள் ஏதேனும் ஒரு மாநில மொழியை கற்றுக்கொள்வது, அவர்களின் தொடர்புகளை விரிவாக்குவதற்கு உதவி செய்யும் என்று கல்வித்துறை எதிர்பார்க்கிறது.

இந்த புதிய அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் ஒரு அச்சத்தினை ஏற்படுத்தினாலும் , கல்வி வாரியம் அவர்களின் மன சுமையை குறைக்க அதிரடியாக சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த சலுகையின்படி அவர்கள் கற்கும் மூன்றாவது மொழிக்கு 10 ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தப்பட மாட்டாது.

இந்த மூன்றாவது மொழிக்கான பரிட்சைகள் மற்றும் அதை திருத்தும் பணிகள் அனைத்தையும் , அந்தந்த பள்ளிகளே திட்டமிட்டு நடத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசின் கல்வி வாரியம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் மூன்றாவது மொழியின் மீது எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை.

தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த மும்மொழி பாடத்திட்டம் இருக்கிறது. மாணவர்களின் பல மொழி திறனை உருவாக்குவதன் மூலம் அவர்கள் பல்வேறு கலாச்சாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்களின் எதிர்கால தொடர்புக்கும் இந்த மொழிகள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். பன்மொழி சிந்தனை மாணவர்களின் கல்வி கற்றல் திறனுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருபுறம் இந்த அறிவிப்பினால் மாணவர்களுக்கு தேர்வுச் சுமை இல்லை என்றாலும் , அவர்களுக்குள் கூடுதலான ஒரு மொழிப்பாடம் மனச்சுமையை அதிகரிக்கும் என்ற கருத்து பரவி வருகிறது. இதனால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மத்தியில் கவலையும் ஏற்பட்டுள்ளது.

என்னதான் மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாலும் , அது கூடுதலாக ஒரு பாடச் சுமையாக கருதப்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com