அஸ்ஸாமில் விஷக் காளான் சாப்பிட்டு 3 பேர் பலி!

அஸ்ஸாமில் விஷக் காளான் சாப்பிட்டு 3 பேர் பலி!
Published on

அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டத்தில் "விஷக்காளான்" சாப்பிட்டு இரண்டு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் இறந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஏப்ரல் 2 ஆம் தேதி ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் காளானை உட்கொண்ட சம்பவம் மாவட்டத்தின் மெரபானி பகுதியில் நடந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் காளான் சாப்பிட்டு இறந்தனர். 2 வயதுக் குழந்தை ஹேமந்த் பர்மன் நேற்று இரவு இறந்தார், அவரது தாயார் 23 வயது தரலி பர்மன், 24 வயதான தந்தை பிரபுல்லா பர்மன் முறையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இறந்தனர்," என்று அதே காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் ஜோர்ஹாட் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ஜேஎம்சிஎச்) இறந்தனர் என்றும் அதிகாரி கூறினார்.

இது குறித்து மெரபானி சமூக சுகாதார மைய துணைக் கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரா ஷியாம் கூறுகையில், "5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் விஷம் கலந்த காளானை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர்.

நோய்வாய்ப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளது என்றார் ஷியாம்.

நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் காளான்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் உண்ணக்கூடிய வகையினதை மட்டுமே நாம் பயன்படுத்த வேண்டும். காளானில் உண்டதும் மரணம் விளைவிக்கக்கூடிய வகையிலான விஷக் காளான்களும் உண்டு. சில நேரங்களில் மனிதர்கள், அவற்றை அடையாளம் கண்டு பிரித்தறியத் தவறினால் அவை மரணம் விளைவிக்கின்றன.

காளான்களில் விஷக்காளான்களை கண்டுபிடிப்பதும் அத்தனை எளிதில்லை. ஆகவே காளான்களைப் பொருத்தவரை புதிதாக எதையாவது உண்ண முயற்சிக்காமல் நம் முன்னோர் முன்பே பயன்படுத்திப் பார்த்து விஷமில்லாதது இது எனத் தெளிவாகக் கண்டறிந்து சமையலில் புழங்கி வரும் காளான்களையே நாம் தொடர்ந்து உண்பது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com