அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு அதிரடி!

அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை: தமிழக அரசு அதிரடி!

கோவையில் நடந்த அசம்பாவித சம்பவத்தைத் தொடர்ந்து அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டு சிறை தண்டனை என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையெடுத்து தமிழகம் முழுவதும் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் உள்ள பேனர்கள் ஆய்வு செய்யப்பட்டு அகற்றும் பணி ஆரம்பமாகியுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட மேம்பாலம் உள்ள கருமத்தம்பட்டி பகுதியில் வைக்கப்பட்ட பேனர், சென்ற வாரம் விபத்துக்குள்ளானது. அதில் சேலத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியை மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளின் தடையில்லா சான்றிதழ் பெற்று வைக்கப்பட்டுள்ள பேனர்கள் முறைப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறதா, நிபந்தனைகளை உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி விதிகளின் படி அனுமதி பெறாமல் பேனர் வைக்கக்கூடாது என்னும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டே அமலுக்குக் கொண்டு வரப்பட்ட உத்தரவில் மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறை அல்லது ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்ட்டது.

கருமத்தம்பட்டியில் வைக்கப்பட்ட பேனர்கள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட பகுதி கோவை, திருப்பூர் எல்லையோரத்தில் உள்ளதால் அது எந்தப் நகராட்சியின் கீழ் வருகிறது என்பதில் தெளிவில்லை என்பதால் நடவடிக்கை தாமதமானது.

உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் ஏன் நடைபாதைகளில் வைக்கப்படும் எந்தவொரு பேனருக்கும் அனுமதி பெறப்படவேண்டும். ஒவ்வொரு பேனரிலும் அதன் உரிமையாளர், ஒப்புதல் பெறப்பட்ட காலம் உள்ளிட்ட விஷயங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும மக்கள் நடமாட்டமுள்ள சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட இடங்களில் அதிகளவில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலும் மத்திய, மாநில அரசு சார்ந்த விளம்பரங்கள், விழிப்புணர்வு பிரச்சரங்கள், அரசியல் கட்சிகளின் பேனர்கள்தான் பிரதானமாக வைக்கப்பட்டுள்ளன. அரசு பேனர்கள், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு அனுமதி கோரப்படுவதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com