ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம்!

ராணுவத் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி; ஏராளமானோர் படுகாயம்!

மியான்மர் நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க அந்நாட்டு ராணுவம் மறுத்து விட்டது. இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.

மேலும், ஆங் சான் சூச்சி, மியான்மர் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் ராணுவம் வைத்தது. மியான்மர் ராணுவத்தின் இம்முடிவை உலக நாடுகள் பலவும் எதிர்த்த நிலையில், ராணுவம் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் மியான்மரின் தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தை ராணுவம் நீக்கி உத்தரவிட்டு இருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில்தான், மியான்மர் நாட்டின் சாஜைங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் பலர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்தப் பகுதியில் இன்று மியான்மர் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பொதுமக்கள் சுமார் 30 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்து உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல் தொடர்பாக மியான்மர் ராணுவத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. முன்னதாக, ’ராணுவ ஆட்சியை எதிர்க்கும் எதிர்ப்பாளர்கள் முடக்கப்படுவார்கள்’ என்று மியான்மர் ராணுவம் தெரிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com