ஆபாச வீடியோக்கள் பகிர்ந்து கொள்ள 30 வாட்ஸ்அப் குழு! கன்னியாகுமரி பாதிரியார் விவகாரம்!

ஆபாச வீடியோக்கள் பகிர்ந்து கொள்ள 30 வாட்ஸ்அப் குழு! கன்னியாகுமரி பாதிரியார் விவகாரம்!

ஆபாச சாட்டிங் மற்றும் வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள 30 வாட்ஸ் அப் குழுக்களை பாதிரியார் பெனெடிக் ஆண்டோ தொடங்கியிருந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெனடிக்ட் ஆண்டோ இளம்பெண்களுடன் வாட்ஸ் அப்பில் ஆபாசமாக சாட்டிங், வீடியோ காலில் நிர்வாண காட்சிகள் போன்றவை சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

பாதிரியாரான பெனடிக்ட் ஆண்டோ குமரி மாவட்டத்தின் பிலாங்காலை பேராலயத்தின் பாதிரியாராக பணியாற்றி வந்தார். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவாலயங்களிலும் பணியாற்றியுள்ளார். பெனடிக்ட் ஆண்டோ பிளஸ் 2 படித்துவிட்டு இறையியல் கல்வியை முடித்துள்ளார். தொலைதூரக் கல்வி மூலம் எம்.ஏ., எம்.பி.ஏ படித்துள்ள இவருக்கு மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளை பேசத்தெரியும் என்கிறார்கள்.

பெனடிக்ட் தன்னுடன் பணியாற்றிய 30 பாதிரியார்கள் மற்றும் 5 பெண்கள் கொண்ட வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கினார். இந்த குரூப்பில் தான் எடுத்த ஆபாச வீடியோக்கள் மற்றும் இளம் பெண்களுடன் பேசிய சாட்டிங்குகள், ஆபாச புகைப்படங்களை பகிர்ந்து வந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் இருந்து சைபர் கிரைம் போலீசார் 13 சிம்கார்டுகள், மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இந்த 13 சிம் கார்டுகளில் ஆறு சிம் கார்டுகள் கர்நாடக மாநிலத்தில் வாங்கப்பட்டவை என தெரிந்துள்ளது. இவற்றை யாரிடம் இருந்து வாங்கினார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் தொடர்பில் இருந்தவர்களையும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோவிடம் போலீசார் 10 மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com