நுகர்வோரை ஏமாற்றும் 'டார்க் பேட்டர்ன்ஸ்': ஜிஎஸ்டி வரி குறைப்புப் பலன்கள் மறுக்கப்படுவதாக 3,000 புகார்கள்..!!

ஜிஎஸ்டி புகார்கள்
ஜிஎஸ்டி
Published on
GST COMPLAINTS
GST COMPLAINTS

சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதக் குறைப்புகளின் பலன்களை சில்லறை வணிகர்கள் (Retailers) நுகர்வோருக்கு அளிக்காமல் ஏமாற்றுவதாகவும், தவறான தள்ளுபடிகளை (Misleading Discounts) வழங்குவதாகவும் கிட்டத்தட்ட 3,000 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே (Nidhi Khare) தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தைத் தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட வரி விகிதங்கள் நடைமுறைக்கு வந்த நிலையில், இந்தப் புகார்கள் வலுப்பெற்றுள்ளன.

திங்களன்று நடந்த ஒரு நிகழ்வில் பேசிய செயலாளர் நிதி காரே, இந்த நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் குறித்துத் தினசரி புகார்கள் வந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

பெறப்பட்ட சுமார் 3,000 புகார்களும் மேல் நடவடிக்கைக்காக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை வாரியத்திற்கு (CBIC) அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

'டார்க் பேட்டர்ன்ஸ்' (Dark Patterns) மூலம் ஏமாற்றுதல் விரிவாக: ஜிஎஸ்டி வரி குறைப்புக்குப் பிறகும் சில்லறை வணிகர்கள் பயன்படுத்தும் "டார்க் பேட்டர்ன்ஸ்" (விலையிடலில் நுகர்வோரை ஏமாற்றும் தந்திரங்கள்) குறித்து நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் நிதி காரே விரிவாக விளக்கினார். 

இந்தப் புகார்கள் அனைத்தும், வரி குறைக்கப்பட்டதன் பலன்களை நிறுவனங்கள் நேரடியாக விலையில் குறைக்காமல், ஏமாற்றும் வழிமுறைகளைக் கையாள்வதை மையப்படுத்துகின்றன.

உதாரணமாக, வாடிக்கையாளர்களைக் குழப்புவதற்காக, தள்ளுபடி செய்வதற்கு முன் இருந்த விலையை மிகைப்படுத்திக் காட்டுவது அல்லது முன்பு வழங்கிய தள்ளுபடிகளை நிறுத்திவிட்டு, ஜிஎஸ்டி குறைப்புக்குப் பிறகு அதுவே பெரிய சலுகைபோலக் காட்டுவது போன்ற உத்திகள் இதில் அடங்கும். 

இதன் மூலம், வாடிக்கையாளர்கள் ஜிஎஸ்டி சலுகையை அடைந்ததாகக் கருதுகிறார்கள், ஆனால் உண்மையில் அந்தப் பலன்கள் நிறுவனங்களிடமே சென்று சேர்கின்றன என்று அவர் கூறினார்.

கூட்டு வழக்கு (Class Action) எச்சரிக்கை: நுகர்வோரின் புகார்களைக் கண்காணிக்கவும், பகுப்பாய்வு செய்யவும் அமைச்சகம் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் சாட்பாட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும் நிதி காரே தெரிவித்தார். 

குறிப்பிட்ட துறைகளிலோ அல்லது பரவலாகவோ அதிக எண்ணிக்கையிலான புகார்கள் வந்தால், இந்தச் சில்லறை வணிக நடைமுறைகளுக்கு எதிராக ஒரு கூட்டு வழக்கு (Class Action) தொடர அரசு தயாராக இருப்பதாக அவர் எச்சரித்தார்.

தவறான விளம்பரங்கள், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வழங்காத நிறுவனங்கள் மீது அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

புகார் குறித்த விபரங்களுக்கு : 1915 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com