தன் கடைசிப் பதிப்பை அச்சிட்ட 320 ஆண்டுகள் பழமையான பத்திரிக்கை

தன் கடைசிப் பதிப்பை அச்சிட்ட 320 ஆண்டுகள் பழமையான பத்திரிக்கை
Published on

லகிலேயே மிகப் பழமையான Wiener Zeitung என்ற தேசிய செய்தித்தாள், 320 ஆண்டுகள் தொடர்ந்து செயல்பட்டு வந்த நிலையில், அதன் கடைசி தினப் பதிப்பை அச்சிட்டு தன் சகாப்தத்தை முடித்துக் கொண்டது. 

வியன்னாவை தளமாகக் கொண்ட தினசரி நாளிதழ் வீனர் ஜெயிட்டுங், அங்கே சமீபத்தில் மாற்றப்பட்ட புதிய சட்டம் காரணமாக லாபம் இல்லாமல் போனதால், அதன் பதிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரியாவின் கூட்டணி அரசாங்கம் கொண்டு வந்த புதிய சட்டமான செய்தித்தாளின் அச்சு பதிப்பில் பொது அறிவிப்புகளை வெளியிடுவதற்கு நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையை மாற்றியதால், Wiener Zeitung பத்திரிகையின் லாபம் பெரிய அளவில் பாதிப்படைந்தது. 

இந்த புதிய மாற்றத்தால் நிறுவனத்தின் வருவாய் சுமார் 19 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இழப்பை சந்தித்தது. இதனால் அதில் பணியாற்றிய முதல்நிலைப் பணியாளர்களை 55 இல் இருந்து 20ஆகக் குறைத்து, ஒட்டுமொத்தமாக 63 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இந்தப் பத்திரிகை தொடர்ந்து இணையத்தில் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் மாதாந்திர அச்சுப்பதிப்பை விநியோகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்த செய்தித்தாள் 1703 ஆம் ஆண்டில் வெளியிடத் தொடங்கி, இதுவரை 12 ஜனாதிபதிகளைக் கண்டுள்ளது. செய்தித்தாளின் முதல் பதிப்பில் "எவ்விதமான தவறான விஷயங்களையும் செய்திகளில் இணைத்துக் கூற மாட்டோம்" என கூறப்பட்டிருந்தது. 1968 ல் திறமையான 12 வயது சிறுவன் நடித்த கச்சேரி பற்றிய செய்தி வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் இது மிகப் பிரபலமான செய்தியாக மாறியது. அதேபோல முதல் உலகப்போரில் ஆஸ்திரியா தோல்வியை சந்தித்ததும், கடைசி பேரரசர் கெய்சர் கார்லின் பதவி விலகல் கடிதத்தை கொண்ட ஒரு சிறப்பு பதிப்பும் இந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டது. 

தனது 300 ஆண்டுகால பத்திரிக்கை வரலாற்றில், ஒரே ஒரு முறை மட்டுமே இந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. 1939இல் ஆஸ்திரியா ஹிட்லரின் ஜெர்மனியில் இணைக்கப்பட்ட போது இது நடந்தது. பின்னர் மீண்டும் 1945 இல் செய்தித்தாள் அச்சிடத் தொடங்கப்பட்டது. 

கடந்த வாரத்தில் தனது கடைசி பதிப்பை வெளியிட்ட இந்தப் பத்திரிக்கை, அரசின் புதிய சட்டம் குறித்து விமர்சித்தது. மேலும், இது உண்மையான பத்திரிகை களின் மோசமான காலம் என்றும், பல தளங்கள் போலியான செய்திகள், போலியான வீடியோக்கள், மற்றும் சதிக் கோட்பாடுகளிலேயே கவனம் செலுத்துகிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com