அமெரிக்க ஆய்வறிக்கை : மூன்றில் ஒரு பங்கு இந்தியர்களுக்கு ஊர் திரும்ப ஆசையாம்!

மாதிரி படம்
மாதிரி படம்

சியாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஊர் திரும்ப விருப்பம் கொண்டிருப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. Pew என்னும் அமெரிக்க நிறுவனம், அமெரிக்காவில் செட்டிலான ஆசியர்கள் மத்தியில் எடுத்த ஆய்வறிக்கையில் இந்தியர்களின் மனப்போக்கு மாறியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

 சீனாவிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் செட்டிலானவர்கள் தவிர மற்ற ஆசியர்கள் குறிப்பாக இந்தியர்கள், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய தாய் நாட்டுடன் தொடர்பில் இருக்கவே விருமபுகிறார்கள்.

இந்தியர்கள் மீதான மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்திருப்பதும் ஆய்வறிக்கையில் தெரிய வந்திருக்கிறது. 76 சதவீத அமெரிக்க இந்தியர்கள் இந்தியா குறித்து நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு செல்ல விரும்புகிறீர்களா என்னும் கேள்விக்கு 33 சதவீதம் பேர்  திரும்பி இந்தியாவுக்கு போய் செட்டிலாவதை விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.

கடந்த ஐந்தாண்டுகளில் அமெரிக்க இந்தியர்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாக பார்க்க வேண்டியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா திரும்பி வருவது பற்றி யாரும் நினைத்துக்கூட பார்ப்பதில்லை. குறிப்பாக வயதானவர்கள், ஓய்வுக்குப் பிறகு இந்தியா திரும்ப வேண்டும் என்று விருப்பம் இருந்தால் கூட பிள்ளைகளை பிரிந்து இருக்க வேண்டுமே என்பதால் தயங்கும் நிலைதான் இருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களில் நிறைய பேர்  இந்தியாவுக்கு திரும்பி வருவதற்கு ஆர்வம் கொண்டுள்ளார்கள். அதேநேரம் இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட குடும்பங்கள் இந்தியாவுக்கு வர தயாராக இல்லை. குறிப்பாக அமெரிக்காவில் பிறந்த இந்திய குழந்தைகளில் 85 சதவீதம் பேர் இந்தியாவுக்கு திரும்பி வர தயாராக இல்லை.

அமெரிக்காவோடு ஒப்பிடும்போது  இந்தியாவில் செலவுகள் குறைவு என்பதற்காகவே ஊர் திரும்பி விடலாம் என்று நினைப்பவர்களும் உண்டு. ஏறக்குறைய 52 சதவீதம் பேர், அமெரிக்காவை விட இந்தியாவில் எளிமையாக வாழ்க்கையை நடத்தமுடியும் என்று நம்புகிறார்கள்.  வாங்க, வந்து பாருங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com