ஏப்ரல் மாதத்திற்குள் வரும் மெகா அப்டேட்..! பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு உறுதி..!

33% Women’s Reservation Bill Soon! – Kiren Rijiju
33% Women’s Reservation Bill Soon!" – Kiren Rijiju
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மகிழ்ச்சியான செய்தியை, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். பாலின சமத்துவம் கருதி மகளிர்க்கு அனைத்து துறையிலும் 33% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், என்ற மசோதா நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்கி அமல் படுத்துவதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது. இதற்காக இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படவுள்ளது.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்காக மற்ற கட்சிகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்து வருகிறது. இதுவரை 80% அதிகமான ஆதரவுகளை திரட்டி உள்ளது, ஏப்ரல் மாதத்திற்கு உள்ளாகவே இந்த மசோதாவை நிறைவேற்ற அரசு முனைப்பு காட்டி வருகிறது. பல கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளதால் நாடாளுமன்றத்தில் எளிதில் இது சட்டமாக்கப்படும். இங்க சட்டத்தின் மூலம் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு கட்டாயம் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com