3M நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

 3M நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு!

உலகளவில் டெக்னாலஜி துறை மிகவும் மோசமான நிலையில் இருக்கும் வேளையில் தொடர்ந்து ஐடி ஊழியர்களையும், ஐடி முதலீட்டாளர்களையும் பயமுறுத்தும் வகையில் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி வருவது வழக்கம். அந்த வகையில் , உலகின் முன்னணி டெக் மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் செலவுகளை குறைக்க வேண்டும் என்பதற்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டு செய்து வருகிறது . அந்த வகையில் தற்போது 3M நிறுவனம் தனது 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு அதிர்ச்சியினை ஏற்படுத்து உள்ளது.

அமெரிக்க நிறுவனமான 3M அதிகப்படியான வளர்ச்சி, லாபத்தை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக செலவுகளை குறைக்கவும், ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும் 3M 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த 6000 ஊழியர்கள் பணிநீக்கத்தை உலகளவில் இருக்கும் தனது வர்த்தகத்தில் செய்ய உள்ளது 3M நிறுவனம். இதனால் அதன் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

6000 ஊழியர் களின் பணிநீக்கம் வெளியான நிலையில் 3M பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 1.6 சதவீதம் வளர்ச்சி அடைந்து 106.7 டாலராக உள்ளது . அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் மூலம் செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் பெரும்பாலான நிறுவனங்கள் அதிகப்படியான கடனில் இயங்கி வந்தது. கடந்த 6 மாதத்தில் வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் தற்போது 3M உட்பட பல முன்னணி நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com