7 மாதங்களில் 4 கோடி பேர் பயணம் : முக்கிய போக்குவரத்தாக மாறும் சென்னை மெட்ரோ!

மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்
Updated on

சென்னை மெட்ரோவை 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில் 4 கோடி பேர் பயன்படுத்தி இருப்பதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு.

சென்னையில் மெட்ரோ பயன்பாட்டிற்கு வந்த பிறகு அதற்கான வரவேற்புகள் போதிய அளவிற்கு இல்லை. அதன் பிறகு கட்டணத்தை மறுவறை செய்து கட்டணம் குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்னையில் மெட்ரோ சாமானிய, ஏழை, எளிய மக்களும் பயன்படுத்தும் போக்குவரத்து சாதனமாக மாறியது.

மேலும் மெட்ரோ பயன்படுத்துவதன் மூலம் பயணம் நேரம் குறைகிறது, சுகாதாரமான சூழல், முழுவதும் குளிரூட்டப்பட்ட நிலை இவற்றுக்கு மேலாக குறைந்த கட்டணம் ஆகியவை மெட்ரோவை நோக்கி மக்கள் படையெடுக்க காரணமாக இருக்கிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் மெட்ரோவை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்து வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோவில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 4 கோடியே 95 லட்சத்து 90 ஆயிரத்து 88 பேர் பயணம் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜனவரி மாதத்தில் 66 லட்சத்தி 7 ஆயிரத்து 458 பேரும், பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்தி 69 ஆயிரத்து 282 பேரும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்தி 99 ஆயிரத்து 949 பேரும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பேரும், மே மாதத்தில் 72 லட்சத்து 68 ஆயிரத்தி 7 பேரும், ஜூன் மாதத்தில் 74 லட்சத்து 60 ஆயிரத்தி 876 பேரும், ஜூலை மாதத்தில் 82 லட்சத்தி 53 ஆயிரத்து 692 பேரும் பயணம் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் மாதம் 28ஆம் தேதி மட்டும் 3.8 லட்சம் பேர் பயணம் செய்து இருப்பதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com