விபத்தில் சிக்கி கவிழ்ந்த லாரி: 4000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

டிப்பர் லாரி
டிப்பர் லாரி
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

குடியாத்தம் அருகே, லாரி கவிழ்ந்ததில் டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர். அதே சமயம் கடத்தப்பட்ட, 4,000 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது.

வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த, தாங்கல் கிராமத்தில் இருந்து, நேற்று காலை ஜல்லி ஏற்றிக்கொண்டு வேப்பூர் கிராமம் அருகே, 'டிப்பர்' லாரி சென்றது.

எதிரே வந்த மற்றொரு லாரி டிப்பர் மீது மோதியதில், இரு லாரிகளும் கவிழ்ந்தன. இரு டிரைவர்களும் படுகாயம் அடைந்தனர்.

குடியாத்தம் டவுன் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை சோதனை செய்ததில், 4,000 கிலோ ரேஷன் அரிசி இருந்ததை கண்டனர்.

குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி, வேலூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசார், ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com