ஃபேஸ்புக் பயனரின் அக்கவுண்டுக்கு வந்த 41 லட்சம்.

ஃபேஸ்புக் பயனரின் அக்கவுண்டுக்கு வந்த 41 லட்சம்.
Published on

ஃபேஸ்புக் கணக்கில் ஏற்பட்ட ஒரு தவறால், அதன் பயனர் ஒருவருக்கு ரூபாய் 41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல பலருக்கும் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை என்றால், நம்மை வேற்று கிரக வாசிக்க போல பிறர் பார்க்க வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக் கணக்கு இல்லை என்று கூறினாலே, நம்மை ஒரு நிமிடம் மேலும் கீழுமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால் மக்கள் மத்தியில் ஃபேஸ்புக் பயன்பாடு அந்த அளவுக்கு பின்னிப் பிணைந்துவிட்டது. 

நம்மில் பலருக்கு தினசரி ஒரு குறிப்பிட்ட நேரம் ஃபேஸ்புக் பயன்படுத்தவில்லை என்றால் அந்த நாளே ஓடாது. தன்னிச்சையாக நம்மையும் அறியாமல் பேஸ்புக் கணக்கின் உள்ளே சென்று எதையாவது பார்த்துக் கொண்டிருப்போம். இதில் சிலருக்கு நடுராத்திரியில் போட்டோ வீடியோ பதிவு செய்துவிட்டு, காலையில் எழுந்த உடனேயே அதற்கு எவ்வளவு பார்வைகள், கமெண்ட்ஸ், லைக் வந்திருக்கிறது என்பதை பார்க்கும் பழக்கம் உள்ளது. 

இப்படி எப்பொழுதும் பேஸ்புக்கைப் பயன்படுத்தும் ஒரு நபரின் கணக்கு லாக் செய்யப்பட்டால் எப்படி இருக்கும்? 

இப்படிப்பட்ட ஒரு சம்பவம் ஒரு நபருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் கடுப்பான அந்த நபர் செய்த ஒரு காரியம் தான் அவருக்கு 41 லட்சத்தைப் பெற்றுத் தந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா மாகாணத்தில் வசிக்கும் ஜேசன் என்பவர், கொலம்பஸ் நகரில் புகழ்பெற்ற வழக்கறிஞராக இருந்து வருகிறார். இவருக்கு சமூக ஊடகங்களில் அதிக ஆர்வம் இருப்பதால், பல ஆண்டுகளாக ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இவருடைய கணக்கு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. 

இதற்கு ஃபேஸ்புக் தரப்பிலிருந்து, அவரது கணக்கில் குழந்தைகள் தொடர்பான தவறான வீடியோவை பிறருக்குப் பகிர்ந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜேசன் மிகுந்த மன உளைச்சலுக்கு உண்டாகி, தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு விளக்கம் தர முடிவு செய்தார். ஆனால் அவர் நினைத்ததுபோல் அவ்வளவு எளிதில் ஃபேஸ்புக் நிறுவனத்தை நெருங்க முடியவில்லை. இதனால் ஜார்ஜியா நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடுத்தார். இதற்கு சரியான பதில் அளிக்கும்படி face book நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்காததால், நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. 

அதன் பிறகு இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டதில், ஜேசனுக்கு எதிராக எந்த ஆதாரமும் பேஸ்புக் நிறுவனத்திடம் இல்லை. எனவே சரியான காரணங்களின்றி அவரது பேஸ்புக் கணக்கை முடக்கி, அதற்குரிய சரியான காரணத்தை பயனருக்கு விளக்க தவறியதற்காக, $50,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமென ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்தத் தொகையை ஜேசனுக்கு இழப்பீடாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதுபோல முறையான விளக்கமின்றி ஃபேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டிருந்தால், அது தொடர்பாக அந்நிறுவனத்திடம் யார் வேண்டுமானாலும் கேள்வி எழுப்பலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com