இந்தியாவின் 'ஐடி ஹப்' என்று அழைக்கப்படும் பெங்களூரு மாநகரம், பல்வேறு நகரங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான ஊழியர்கள் வந்து தங்கும் மற்றும் வசிக்கும் முக்கிய மையமாகத் திகழ்கிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, வாகனப் போக்குவரத்தும் அங்கு மிக வேகமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவின் முக்கிய நெடுஞ்சாலைகளில் நிலவும் செல்போன் சிக்னல் பாதிப்பு, பயணிகளுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஒரு நகரிலேயே, பயணங்களின் போது அவசரத் தேவைகளுக்கோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ முடியாமல் சிக்னல் துண்டிக்கப்படுவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாகப்புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
நெடுஞ்சாலைகளில் சிக்னல் டவர்கள் இல்லாத அல்லது அதிக தூரத்தில் உள்ள பகுதிகள் , சிக்னல் தடுக்கும் மலைகள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் போன்றவை , புவியியல் அமைப்புடன் அதிக எண்ணிக்கையிலான பயனர்கள் ஒரே நேரத்தில் இணைவதால் நெட்வொர்க் நெரிசல் ஏற்பட்டு சிக்னல் கிடைக்காத நிலை ஏற்படலாம் என பல காரணங்கள் இந்த சிக்னல் பிரச்சினைக்கு கூறப்படுகிறது.
இதற்கு தீர்வுகளும் உண்டு.அதாவது நெடுஞ்சாலையில் பொதுவாக சில பகுதிகளில் இருக்கும், குறிப்பாக சிக்னல் டவர்கள் இல்லாத அல்லது தூரத்தில் உள்ள இடங்களில், இதற்கு சிக்னல் பூஸ்டர் (Signal Booster) பயன்படுத்துவது அல்லது நெட்வொர்க் சேவை வழங்கும் நிறுவனத்திடம் புகார் அளிப்பது தீர்வாக இருக்கும் எனவும் மேலும் சில செயலிகள் சிக்னல் சவால்களைக் கடக்க உதவும் எனவும் பயணிகளின் கருத்தாக இருக்கிறது.
இந்நிலையில் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் சிக்னல் பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்க இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு (TRAI) நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரப்பூர்வ கடிதம் (Email/Letter) அனுப்பி உள்ளது. நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக ஏற்படும் செல்போன் சிக்னல் இல்லாத பிரச்சினை குறித்து – அவசர நடவடிக்கை எடுக்க கோரும் இக்கடிதம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சிக்னல் பிரச்சினையால் எதிர்பாராத அவசர விபத்து நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் ரோந்து வாகனங்கள், போலீஸ் உதவிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தவிர்க்க முடியாத மரணங்கள், அவசர காலத்தில் பயணிகள் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து , பயணங்களின் போது ஆன்லைன் வழி செலுத்தும் GPS வழிகாட்டல், FASTag, UPI போன்ற அத்தியாவசிய டிஜிட்டல் சேவைகளில் தடங்கல் உள்ளிட்ட அடிப்படை சேவைகளில் தடங்கல் போன்ற பல கடுமையான சிக்கல்கள் உருவாகுகின்றன.
மேற்கண்ட நெடுஞ்சாலையில் 1750 கி மீட்டர்களில் 424 இடங்களில் கூடுதல் மொபைல் டவர் அமைத்தல், தற்போதுள்ள டவர்களின் சிக்னல் திறனை மேம்படுத்தல், தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தீர்வு காணுதல் போன்ற நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள டிராய்க்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது பயணிகளிடையே வரவேற்பு பெற்றுள்ளது.மேலும் தெரு நாய்கள் நடமாட்டம் காரணமாக விபத்து ஏற்படக்கூடியதாக கருதும் 1665 இடங்கள் கண்டறியப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு முன்கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
இந்த பிரச்சினை தொடர்பாக விரைவில் ஆய்வு செய்து தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.