நாகூர் தர்காவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டை; தமிழக அரசு அன்பளிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாகூர் தர்காவில் நடைபெறவுள்ள நாகூர் தர்கா கந்தூரி திருவிழாவினை முன்னிட்டு சந்தன கட்டைகளை கட்டணமின்றி வழங்கும்படி தமிழ்நாடு வக்ஃப் வாரியம், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதையடுத்து 45 கிலோ சந்தனக் கட்டைகளை நாகூர் தர்காவிற்கு கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.

அதையடுத்து நேற்று  தலைமைச் செயலகத்தில், நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் செய்யது காமில் மற்றும் நாகூர் தர்கா தலைவர் செய்யது முஹம்மது கலீபா காதிரி ஹாசிமி மற்றும் அறங்காவலர் ஹாஜா நஜிமுதின் ஆகியோரிடம் அந்த அரசாணையை வழங்கினார்

இந்நிகழ்வில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ உட்பட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com