நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம்!

ஜி.எஸ்.டி
ஜி.எஸ்.டி

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 18ம் தேதி நாளை சனிக்கிழமை நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.

பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49 வது கூட்டம் நடைபெறுவதால் வர்த்தகத் துறையின் கவனம் மொத்தமாக இக்கூட்டத்தை நோக்கி திரும்பியுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 48வது கூட்டம் டிசம்பர் 17, 2022 அன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில், ஆதாரங்களைச் சேதப்படுத்துவது உட்பட, மூன்று வகையான குற்றங்களை ரத்துச் செய்யப் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டத்தில், பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் வரி ஏய்ப்பைத் தடுக்க மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் மற்றும் வழிமுறைகள் அமைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

இந்தியா முழுவதும் எதிர்பார்த்து இருக்கும் ஆன்லைன் கேமிங் குறித்த அமைச்சர்கள் குழுவின் அறிக்கை மற்றும் ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அறிக்கை நாளை நடைபெறும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரியை தற்போதைய 28 சதவீதத்தில் இருந்து குறைக்க முடியுமா? என்பதை ஆய்வு செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக உள்ளது. அதிகாரிகள் குழு இது குறித்து ஆய்வு செய்யும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார்.

இந்தியாவில் பால், அரிசி, கோதுமை மாவு, பருப்பு மற்றும் தானியங்கள் என மக்கள் தினமும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடந்த ஒரு மாதத்தில் 5-15% அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாகச் சந்தையில் டிமாண்ட் குறைந்து வர்த்தகம் பாதிக்கத் தொடங்கும் என்று நிறுவனங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பணவீக்க உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது எனச் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் இதுக்குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

பணவீக்க உயர்வால் மக்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வரும் வேளையில், மக்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு மக்காச்சோளம் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது எனச் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதனால் இதுக்குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com