

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு வெளியூர்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தோடு சென்று கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜன.14 முதல் 18 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகை, பொங்கல் பண்டிகை, சனி, ஞாயிறு என 5 நாட்களுக்கு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது