காவல் துறை அதிகாரிகள் 5 பேர் திடீர் பணியிட மாற்றம்! தமிழக அரசு உத்தரவு!

காவல் துறை அதிகாரிகள் 5 பேர் திடீர் பணியிட மாற்றம்!  தமிழக அரசு உத்தரவு!
Published on

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் தொடர்ந்து ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சில மாவட்ட ஆட்சியர் மற்றும் சில காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் .

தமிழ் நாட்டில் தற்போது கிரன் ஸ்ருதி, ரவளி பரியா உள்ளிட்ட 5 காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று காலை 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்த நிலையில் தற்போது 5 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சைபர் பிரிவு துணை ஆணையர் கிரன் சுருதி ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை எஸ்.பி.தீபாசத்யன் சென்னை நவீன காவல் கட்டுப்பாட்டறை எஸ்.பியாகவும், கடலூர் மாவட்ட எஸ்.பி.சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

சென்னை கொளத்தூர் காவல் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் மாவட்ட எஸ்.பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த எஸ்.பி ரவளி பிரியா தமிழ்நாடு காவல் சீருடை பணியாளர் தேர்வாணைய எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கள ஆய்வில் முதலமைச்சர் என்கிற திட்டத்தின் கீழ் இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் பல்வேறு கள ஆய்வுகளை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் இந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாற்றமா என்கிற தகவல்கள் பரவி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com