கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்த 5 வயதுச் சிறுவன்!

கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்த 5 வயதுச் சிறுவன்!
Published on

வாணியம்பாடி அருகே 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் விடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகிறது என்பதைத் தாண்டி பொதுமக்களுக்கான நல்ல பாடமாகி வருகிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூர் ஊராட்சி கரிமாபாத் பகுதியில், ஊராட்சி சார்பில் கழிவு நீர் கால்வாய்கள் சுத்தம் செய்வதில்லை எனவும், தினமும் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணிக்கான ஊழியர்களும் அப்பகுதிகளில் வருவதில்லை எனவும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பலரும் பல மாதங்களாகக் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர்.

கடந்த ஆறு மாத காலமாக அங்கு சரிவர அடிப்படை வசதிகள் எதையும் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர், தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் உள்ளிட்டவர்கள் சரியாக செய்வதில்லை எனவும், ஆள் பற்றாக்குறை தான் காரணம் என்று ஊராட்சி நிர்வாகம் சமாதானம் கூறி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்தனர்.

இப்படி ஒரு பக்கம் வருத்தப்படுவதையும், புலம்புவதையும் மட்டுமே பெரியவர்கள் செய்து கொண்டிருக்க, அப்பகுதியில் கரிமாபாத் முதல் தெருவில் வசிக்கும் அப்துல் வாகித் மகன் அப்துல்லா என்ற 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் நீர் தேங்கி உள்ளதை கண்டு தானாக முன்வந்து தூய்மை செய்யும் பணியில் ஈடுபடத் தொடங்கினான்.

பொதுநல நோக்குடனான சிறுவனின் அச்செயல் அப்பகுதி பொதுமக்கள் அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. ஐந்து வயதுச் சிறுவனுக்குத் தோன்றிய இந்த நல்லெண்ணம் பெரியவர்களுக்குத் தோன்றாமல் போயிற்றே, இப்போதே தாம் வாழும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், மக்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ தூய்மை மிகவும் அவசியம் என்பதை இந்த மிகச்சிறிய வயதிலேயே இச்சிறுவன் உணர்ந்து செயல்பட்டிருக்கிறானே என்று பலரு அவனது செயலை பாராட்டி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com