50 ஜிபி டேட்டா இலவசம்; இப்படி மெசேஜ் வந்தா நம்பாதீங்க!

போலி குறுந்செய்தி
போலி குறுந்செய்தி
Published on

கால்பந்து போட்டியை பார்க்க இலவசமாக 50 ஜிபி டேட்டா தருவதாக சமூக வலைதளங்களில் வரும் பதிவு மற்றும் இணைப்பு போலியானது. அந்த லிங்க்கை யாரும் திறக்க  வேண்டாம் என்று தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு  எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில், கால்பந்து ரசிகர்களைக் கவரும் வகையில் போலியான பல தகவல்கள் உலா வருகின்றன. சமீப நாட்களாக பலருக்கு போனில் 50GB டேட்டா தருவதாக  குறுந்தகவல்களும், சமூக வலைதளங்களிலும் பல்வேறு பதிவுகளும் வெளியாகி, பொதுமக்களிடையே ஆசையை தூண்டி வருகின்றன. இதுபோன்ற செய்திகள் போலியானது, இதன்மூலம் யாரும் ஏமாற வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண 50 ஜிபி டேட்டா இலவசம் என்று வரும் லிங்கை யாரும் ஓபன் செய்ய வேண்டாம். இதன் மூலம் ஹேக்கர்கள் உங்களது தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும்.  எனவே இதனை நம்பி ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகள் உங்களுக்கு வந்தால், உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com