ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்த வீரருக்கு 50 லட்சம்? தமிழக அரசு பரிசீலனை!

விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி மெய்ய நாதன் ஆலோசனை!
Meyyanathan
Meyyanathan
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தமிழக வீரர்களை ஒலிம்பிக் போட்டிக்கு தயார் படுத்த அரசு சார்பில் ஒவ்வொரு வீரருக்கும் 50 லட்சம் ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் பரிசீலனை செய்வதாக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன் தெரிவித்துள்ளார்.

இந்திய அளவில் சிபிஎஸ்சி பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி மெய்ய நாதன் கலந்துகொண்டார்.

Sports
Sports

அமைச்சர் சிவி மெய்ய நாதன் மாணவர்களுடன் டேபிள் டென்னிஸ் விளையாடி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் தமிழகம் ஆந்திரா கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது மாணவர்களிடையே உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்ய நாதன், இந்தியாவில் மெத்தம் 76 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 26 பேர் ஆகையால் இந்தியாவின் செஸ் தலைநகர் சென்னை தான் என் பேசினார்.

மேலும், ஆட்சி பொறுப்பேற்ற 15 மாதங்களில் வெளிநாடு, வெளி மாநிலங்களில் விளையாட்டில் சாதனை படைத்த தமிழக விளையாட்டு வீரர்கள் 1433பேர் 40.89 கேடி வரை ரொக்க பரிசு வழங்கி தமிழக முதல்வர் ஊக்கப்படுத்தி, கௌரவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள ஆண்டுதோறும் அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது என கூறினார்.

அத்துடன், ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராக வரும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டு வரும் 25 லட்சம் நிதியிலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்த முதல்வர் பரிசீலனை செய்து வருகிறார். இந்தியாவில் விளையாட்டின் தலைநகராக தமிழகம் உருவெடுத்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

logo
Kalki Online
kalkionline.com