அரசு பேருந்தில் 50 சதவீதம் கட்டண சலுகை!

அரசு பேருந்தில்  50 சதவீதம் கட்டண சலுகை!

அரசு பேருந்தில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு பயணம் செய்பவர்களுக்கு 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு பதவியேற்றதில் இருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏற்கனவே மகளிர்க்கு இலவச பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான பயண சலுகை பாஸ் வழங்கப் பட்டது. தற்போது பயணிகளுக்கு இந்த 6வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

தொடர்ந்து ஒவ்வொரு துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இன்று போக்குவரத்து மீதான மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் சிவசங்கர் பதிலளித்து பேசினார்.

அப்போது போக்குவரத்து துறையில் புதிய சில அறிவிப்புகளையும் வெளியிட்டார். முக்கியமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக, அடுத்த தொடர் பயணங்களுக்கு, அதாவது ஆறாவது பயணம் முதல் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படும்.

இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் என்ற புதிய அறிவிப்பினை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். இதன் மூலம் பயணிகள் பலர் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com