500 சப்ஸ்க்ரைபர்ஸ் இருந்தாலே போதும் பணம் சம்பாதிக்கலாம்.

500 சப்ஸ்க்ரைபர்ஸ் இருந்தாலே போதும் பணம் சம்பாதிக்கலாம்.
Published on

யூடியூப் நிறுவனம், யூடியூப் சேனல்களுக்கான பணம் சம்பாதிக்கும் விதிகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் தற்போது 500 சப்ஸ்கிரைபர்ஸ் உள்ள யூடியூப் சேனல் கூட பணம் சம்பாதிக்க முடியும் என்ற புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. 

யூடியூப் செயலியை உலகம் முழுவதுமுள்ள பல கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 45 கோடிக்கும் அதிகமான பயனர்கள் youtube-ல் இருக்கின்றனர். இந்தியாவில் இது ஒரு அசைக்க முடியாத சக்தியாகவே மாறிவிட்டது எனலாம். அதற்கு ஏற்றார் போல, யூடியூபில் நமக்குக் கிடைக்காத வீடியோக்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சமையல், தொழில்நுட்பம், பொழுதுபோக்கு, விளையாட்டு, அரசியல், சினிமா என எல்லா விதமான காணொளிகளும் தினசரி யூட்யூபில் பதிவேற்றப்பட்டு வருகிறது. 

ஒரு காலத்தில் யூட்யூபை வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் கோடீஸ்வரர்களை யூடியூப் உருவாக்கி வருகிறது. அதாவது யூடியூப் சேனல் தொடங்கி யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற திட்டம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதற்கு எவ்விதமான முதலீடும் தேவையில்லை. ஒருவருக்கு திறமை இருந்தால் போதும், காணொளி பதிவேற்றம் செய்து லட்சங்களில், ஏன் கோடிகளில் கூட சம்பாதிக்கலாம். 

தொடக்கத்திலிருந்தே யூடியூப் சேனல்கள் வைத்திருப் பவர்கள் பணம் சம்பாதிக்க பல்வேறு மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகளை you tube நிறுவனம் கடைபிடித்து வருகிறது. சமீப காலமாக ஒரு சேனல் வைத்திருப்பவர் அந்த சேனல் வழியாக பணம் சம்பாதிக்க, கடந்த ஒரு ஆண்டில் குறைந்தது 1000 சப்ஸ்கிரைபர்கள் மற்றும் 4000 மணி நேரம், அவர்கள் பதிவேற்றிய காணொளிகளைப் பிறர் பார்த்திருக்க வேண்டும். அல்லது you tube ஷார்ட்ஸ் பதிவேற்றம் செய்பவர்கள் கடந்த 90 நாட்களில் ஷார்ட்ஸ் காணொளிகள் மூலமாக 10 மில்லியன் பார்வைகளை எட்டியிருக்க வேண்டும். இதுதான் முந்தைய விதியாக இருந்தது. இதை ஒரு சேனல் பூர்த்தி செய்திருந்தால் மானிடைசேஷன் செய்யப்பட்டு பணம் சம்பாதிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.

தற்போது இந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிய மானிடைசேஷன் ரூல்ஸ் மற்றும் பாலிசிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விதியின் படி, யூடியூப் சேனலுக்கு குறைந்தது 500 சப்ஸ்க்ரைபர்கள் இருந்து, கடந்த 90 நாட்களில் மூன்று காணொளிகள் பதிவேற்றி, அந்த காணொளியை 3000 மணி நேரம் பிறர் பார்த்து அல்லது you tube ஷார்ட்ஸ் வழியாக 3 மில்லியன் பார்வைகளை எட்டி இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் யூடியூபர்கள் உற்சாகத்தில் குதிக்கின்றனர். ஆனால் இந்த விதிகள் முதன் முதலில் தைவான், கனடா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் அமல்படுத்தப்பட உள்ளது. இது அமல்படுத்தப்பட்ட சில வாரங்கள் கழித்து, எல்லா நாடுகளுக்கும் அறிமுகமாகும் என யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com