5ஜி சேவையில் குறைந்த வருவாயே கிடைக்கிறது - செல்போன் சேவை நிறுவனங்கள் குற்றச்சாட்டு!

 5ஜி சேவை
5ஜி சேவை
Published on

5ஜி சேவையில் குறைந்த வருவாயே கிடைக்கிறது என்று செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கங்களின் இயக்குனர் கோச்சாரி குற்றச்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவை பெரும்பான்மையான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டும் அதற்கான வருவாய் தற்போது வரை கிடைக்கவில்லை என்று செல்போன் சேவை நிறுவனங்களினுடைய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக செல்போன் சேவை நிறுவனங்களினுடைய சங்கங்களின் இயக்குனர் கோச்சார் தெரிவித்திருப்பது, இந்தியா 5ஜி சேவையை வழங்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மிகப்பெரிய பொருட்ச அளவில் அதிக அளவிலான முதலீடை கொண்டு கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் கிராமப்புறங்களிலும் எளிதாக 5ஜி சேவை கிடைக்கிறது. உலகில் அதிவேகமாக அனைத்து பரப்புகளுக்கும் 5ஜி சேவையை கொண்டு சென்ற நாடு என்று முதல் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.

இதன் மூலம் மக்கள் மிக விரைவாக அதிவேக தொலைத் தொடர்பு சேவையைப் பெறுகின்றனர். இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் 5ஜி சேவை நடப்பாண்டில் மிகப் பெரும் அளவில் விரிவடைந்து இருக்கிறது. மிக அதிகமான மக்கள் தொகை கண்ட நாட்டில், பல்வேறு வகையான கால சூழல்கள், பருவநிலை மாற்றங்கள் நிலவும் நாட்டின் நிலப்பரப்பில் இத்தனை வேகமாக பணிகள் செய்யப்பட்டு இருப்பது மிகப்பெரிய நிர்வாக கட்டமைப்பு, பொருளாதாரம் மற்றும் உழைப்பிற்கு கிடைத்த சான்று.

ஆனால் 5ஜி சேவையின் மூலம் அதிவேகமாக இன்டர்நெட்டை பெற முடிந்த அளவிற்கு வருமானங்களை பெற முடியவில்லை. 5ஜி சேவைக்காக செய்யப்பட்டுள்ள முதலீடு மிகப்பெரிய தொகையாகும். ஆனால் அதற்கான போதிய வருமானம் கிடைக்கவில்லை. நிறுவனங்களுக்கிடையே நிலவும் போட்டியின் காரணமாகவும் போதிய வருமானம் கிடைக்காத சூழல் நிலவுகிறது என்று தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com