5ஜி சேவை:  அக்டோபர் 1-ல் நாட்டில் துவக்கம்!

5G Network
5G Network

 அக்டோபர் 1-ம் தேதி இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி துவக்கி வைக்கவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

 -இதுகுறித்து தேசிய அகன்ற அலைவரிசை திட்டத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது;

 நாட்டில் தொலைத்தொடர்புத் துறை (DoT) மற்றும் இந்தியாவின் செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) கூட்டாக இணைந்து ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்பக் கண்காட்சியை இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) என்ற பெயரில் நடத்துகிறது. அக்டோபர் 1-ம் தேதி துவங்கும் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு நாட்டில் 5 ஜி சேவையை தொடங்கி வைக்கிறார்.

Prime Minister
Prime Minister

 இது குறித்து தேசிய அகன்ற அலைவரிசை திட்டத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் இணைப்பை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், பிரதமர் மோடி, இந்தியாவில் 5G சேவைகளை தொடங்கி வைக்கிறார் என்றும், ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்தியா மொபைல் காங்கிரஸில் இந்த 5ஜி சேவை தொடங்கி வைக்கப்படுகிறது.

-இவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com