இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாட்டில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்தும் வகையில் அதிதுரித 5-ம் தலைமுறை தொலைத் தொடர்பு சேவையான 5ஜி நெட்வொர்க்கை கடந்த 1-ம் தேதி பிரதமர் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் இன்று விஜய தசமி தசரா பண்டிகையை முன்னிட்டு ஜியோ நிறுவனம் இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் இன்று முதல் சோதனை அடிப்படையில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
-இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;
நாட்டின் 4 நகரங்களில் இன்று முதல் ஜியோவின் ட்ரு 5G பீட்டா சேவை, 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே தற்போது செயல்பாட்டில் உள்ள சிம் மூலமே இந்த 5ஜி சேவைகளைப் பெறலாம். புதிய சிம் தேவையில்லை.
-இவ்வாறு ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.