5ம் கட்ட வாக்குப்பதிவு: வாக்கு சதவீதத்தை அறிவித்த தேர்தல் ஆணையம்!

Loksabha Election
Loksabha Election

லோக்சபா தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில், நேற்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. தற்போது வாக்குப்பதிவான சதவீதத்தை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட நாட்டின் பல இடங்களில் லோக்சபா தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 64 சதவீத மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினார்கள். முதற்கட்ட வாக்குப்பதிவில், 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

இதனைத்தொடர்ந்து, 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது, அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியபிரதேசம், மகாராஷ்திரா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில், 66.71 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், ஆண் வாக்காளர்கள் 66.9 சதவீதம், பெண் வாக்காளர்கள் 66.42 சதவீதம், மூன்றாம் பாலினத்தவர்கள் 23.86 சதவீதம் பேர் ஆவர்.

இதனையடுத்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் உள்ள 93 தொகுதிகளிலும் நடைபெற்றது. குஜராத்தில் 25 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்திராவில் 11 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 10 தொகுதிகளிலும், கோவாவில் 2 தொகுதிகளிலும், தாத்ரா நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் வங்கத்தில் தலா 2 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்தவகையில், 4-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளிலும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளிலும்  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒடிசாவில் 4, பிஹாரில் 5, ஜார்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்திராவில் 11, உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் மக்களவை தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது.

இதனையடுத்து 49 தொகுதிகளில் நேற்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் 14 தொகுதிகள், மகாராஷ்திராவில் 13 தொகுதிகள்,  மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், பீகார் மற்றும் ஒடிசாவில் 5 தொகுதிகள்,  ஜார்கண்ட்டில் 3 தொகுதிகள் என 6 மாநிலங்களில் 47 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 

இதையும் படியுங்கள்:
Isreal Gaza War: ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்… வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்!
Loksabha Election

ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதியில் நேற்று நடைபெற்றது.  இதில், 695 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர்.  அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.  இந்நிலையில், 60.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com