தீபாவளிக்கு 6,000 கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம்!

பட்டாசு
பட்டாசு
Published on

இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு 100 சதவீதம் விற்றதால், 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுப்பகுதியில், 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. இத்தொழிலில் மூன்று லட்சம் பேர் நேரடியாகவும், எட்டு லட்சம் பேர் மறைமுகமாகவும் பணிபுரிகின்றனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு, மூலப்பொருள் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், 70 சதவீதம் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டது.

பட்டாசு
பட்டாசு

மேலும், 70 சதவீதம் தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்க முடிந்தது. அதே சமயத்தில் பட்டாசு, 30 , 40 சதவீதம் விலை உயர்ந்தது.

இந்த தீபாவளிக்கு உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து பட்டாசுகளும் விற்பனையானதால், 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.

இது, கடந்த ஆண்டைவிட, 30 சதவீதம் அதிகம். இதனால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கமான டான்பாமா தலைவர் கணேசன், 6,000 கோடி ரூபாய்க்கு பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என தெரிவித்துள்ளார்

மூலப்பொருள் விலை உயர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு என பல்வேறு காரணங்களால் உற்பத்தி சற்று குறைந்தாலும் விற்பனை முழுமையாக நடந்து முடிந்துள்ளது.

பட்டாசுக்கு பற்றாக்குறை ஏற்படும் அளவிற்கு, இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை கொண்டாட பட்டாசுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரும்பி வாங்கினர்.

இதனால், 6,000 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது. மத்திய அரசின் ஆதரவும், உச்சநீதிமன்ற தடையும் நீங்கினால் மேலும் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார் டான்பாமா தலைவர் கணேசன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com