தமிழ்நாட்டில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம்!

தமிழ்நாட்டில் இன்று முதல் 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம்!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டுக்கான 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வந்தது. இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடித் தடைக் காலத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு ஆயிரக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாது.

மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020 இன் கீழ் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரை (இரண்டு நாட்கள் உட்பட) 61 நாட்களுக்கு இழுவலை விசைப்படகுகள் மற்றும் தூண்டில் / வழிவலை விசைப்படகுகள் கிழக்கு கடலோர பகுதிகளில் மீன்பிடிப்பதற்கு ஆண்டு தோறும் தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983 மற்றும் திருத்திய விதிகள் 2020இன் படி கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு கடலோர பகுதிகளில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜீன் மாதம் 14 ஆம் தேதி வரையிலும் மீனவர்கள் இழுவலை விசைப்படகு அல்லது தூண்டில் / வழிவலை விசைப்படகினை பயன்படுத்தி மீன்பிடிப்பது 61 நாட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தின் வங்காள விரி குடா, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் இந்த கால கட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் இந்த முதல் அமலுக்கு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு தொடங்கி கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரை 18 மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்கான தடை காலம் நள்ளிரவு முதல் தொடங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com