ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில்  6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஜப்பானில் ஹொக்கைடோ பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பானின் கடற்கரை பகுதியான ஹோக்கைடோவில் 6.1 ரிக்டர் அளவுகோலில் நில நடுக்கம் பதிவாகி உள்ளதாக ஜப்பானின் புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை குறித்து அறிவிப்பு ஏதும் வெளியாவில்லை.

அந்த நாட்டின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள ஆமோரி மாகாணத்தில் ஹொக்கைடோ என்ற இடத்தில் 6.1 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது. ஆமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் 20 கி மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்க அதிர்வைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

earth quake
earth quake

பசிபிக் கடல் பகுதியில் இருந்து 60 கி மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்வு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, நில நடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் , சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப் படவில்லை

துருக்கி நில நடுக்கத்திற்கு பிறகு உலகம் முழுவதும் அடுத்தடுத்து பெரிய அளவில் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருவது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். துருக்கி நில நடுக்கத்தில் 50000 மேற்பட்டோர் பலியான சம்பவம் உலகினையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. மேலும் இன்று துருக்கி மத்திய பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com