உத்தரப்பிரதேச அரசின் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல்!

உத்தரப்பிரதேச அரசின் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல்!
Published on

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை அம்மாநில வரலாற்றில் மிகப்பெரிய பட்ஜெட்-ஐ வெளியிட்டு உள்ளது. உத்தரப்பிரதேச அரசு இன்று கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பட்ஜெட் அறிக்கையை உத்தரபிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா தாக்கல் செய்தார். யோகி ஆதித்யநாத் ஆட்சி காலக் கட்டத்தில் தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு வந்த பிறகு ஏழாவது முழுப் பட்ஜெட் அறிக்கை இது.

உத்தரப்பிரதேச அரசு முன்வைத்துள்ள பட்ஜெட் 2023-24 அறிக்கையில், இளைஞர்கள், ஸ்டார்ட்அப்கள், பெண்கள் மற்றும் விவசாயத் துறை சார்ந்தவர்களுக்கு உதவும் வகையில் அதிகப்படியான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பட்ஜெட் மூலம் உத்தரப்பிரதேச 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர பாதை வகுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்ஃபோனுக்கு ரூ.3600 கோடி ஒதுக்கீடு மாநிலத்தில் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்க ரூ.60 கோடி ஒதுக்கீடு கிராமப்புறங்களில் விவசாயம் சார்ந்த தொடக்கப் பணியாளர்களை ஊக்குவிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு இளம் வழக்கறிஞருக்கு உதவ ரூ.10 கோடி ஒதுக்கீடு, வழக்கறிஞர் நலனுக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சட்டம் ஒழுங்கை வலுப்படுத்த உத்தரபிரதேசத்தில் மூன்று புதிய மகளிர் போலீஸ் பட்டாலியன் உருவாக்க முடிவு.

விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஆதரவற்ற பெண்கள் நலனுக்காக ரூ.4,032 கோடி ஒதுக்கீடு கன்யா சுமங்கலா யோஜனா திட்டத்திற்கு 1050 கோடி ரூபாய். சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு. ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு ரூ.150 கோடி சிறப்பு ஒதுக்கீடு. மார்ச் 2017 முதல் பிரதமர் வீடுகள் திட்டத்தின் கீழ் 17.62 லட்சம் வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

உத்தரப்பிரதேச அரசு இன்று கிட்டத்தட்ட 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்-ஐ தாக்கல் செய்துள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பட்ஜெட் அறிக்கையை உத்தரபிரதேச மாநில நிதியமைச்சர் சுரேஷ் கன்னா தாக்கல் செய்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com