துடித்த தந்தையை கொண்டு செல்ல மறுத்த ஆம்புலன்ஸ்! உடனே அவரது 7 வயது மகன் செய்த காரியம்! வைரல் வீடியோ!

துடித்த தந்தையை கொண்டு செல்ல மறுத்த ஆம்புலன்ஸ்! உடனே அவரது 7 வயது மகன் செய்த காரியம்! வைரல் வீடியோ!

காலம் கலிகாலம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் சில சம்பவங்களும் அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில், சமீபத்தில் மத்திய பிரதேசம், சிங்க்ராலி மாவட்டத்தின் பைலாரி பகுதியில், ஏழு வயது சிறுவன் நெஞ்சுவலியால் துடித்த அப்பாவை தள்ளுவண்டியில் வைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.

மத்திய பிரதேசம், சிங்க்ராலி மாவட்டத்தின் பைலாரி பகுதியைச் சேர்ந்தவர் 48 வயதான ரமேஷ் குமார். இவர் ஒரு கூலித் தொழிலாளி. வறுமையால் வாடிவந்த இவருக்கு 7 வயதில், 2ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் இருக்கிறான்.

இந்நிலையில், கூலித் தொழிலாளியான ரமேஷ் குமாருக்கு திடீரென நெஞ்சுவலி வந்து வேதனையால் துடித்துள்ளார். உடனே ரமேஷ்குமாரின் மனைவி, அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்சிற்கு போன் செய்து தகவலை தெரிவித்துள்ளார்.

அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுநரோ ரூ.200 பணம் அவரிடம் கேட்டுள்ளதாக தெரிய வருகிறது. ஆனால் அவர்களிடமோ பணமும் இல்லை. அதனால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் வர மறுத்துவிட்டார்.

இந்நிலையில், செய்வதறியாது திகைத்த அவரது மனைவியும், 7 வயது சிறுவனும், தங்களது வீட்டருகே இருந்த ஒரு தள்ளுவண்டியை எடுத்து, அதில் தனது கணவரை படுக்கச் செய்தவாறு, அவரும், அவரது 7 வயதான மகனும் கிட்டத்தட்ட 5 கி.மீ. தூரத்திற்கு அந்த தள்ளுவண்டியை தள்ளிச் சென்று மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

இதுகுறித்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தும் வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com