#BREAKING : தைவானில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.0 ஆகப் பதிவு..!

earthquake
earthquake
Published on

தைவான் நாட்டில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைவான் நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0ஆக பதிவான இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் உண்டானது. வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பயத்தில் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்புகள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த புதன்கிழமை தைவானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.0ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன; மக்கள் அச்சம் அடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
நகைக்கடன் வாங்கப் போறீங்களா? இந்த 3 விஷயத்தைத் தெரியாம போனா நஷ்டம் உங்களுக்குத்தான்!
earthquake

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com