74 லட்சம் இந்தியக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

74 லட்சம் இந்தியக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன.

Whatsapp தனது தளத்தில் மோசடிகள் மற்றும் துஷ்பயோகத்தை எதிர்த்து போராடுவதற்கான நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, 2023, ஏப்ரல் மாதத்தில் 74 லட்சம் இந்தியக் கணக்குகளை தடை செய்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ல் ஒரு பகுதியாக நிறுவனம் தாக்கல் செய்த மாதாந்திர அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

"ஐடி விதிகள் 2021ன் படி, ஏப்ரல் 2023-க்காண எங்கள் அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். இதில் பயனர்களின் பாதுகாப்பு அடிப்படையில் பெறப்பட்ட பயனர் புகார்கள் மற்றும் whatsapp எடுத்த நடவடிக்கை மற்றும் வாட்ஸ்அப்பின் சொந்தத் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள் உள்ளன. இதன்படி வாட்ஸ் அப் கடந்த ஏப்ரல் மாதத்தில் 7.4 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகளை தடை செய்தது. மேலும் இந்த கணக்குகளில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான கணக்குகள் பயனர்களிடமிருந்து எந்த அறிக்கையும் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளன" என வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

இதற்கிடையே whatsapp தனது பயனர்களுக்கு அதிக தனியுரிமையை உறுதி செய்யும் முயற்சியில், மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜுகர்பர்க் சமீபத்தில் Chat Lock என்ற புதிய வாட்ஸ் அப் அம்சத்தை வெளியிட்டுள்ளார். இது ஒருவருடன் சேட் செய்யும்போது, பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. இந்த அம்சமானது பயனர்களின் மிகவும் நெருக்கமான உரையாடல்களை தனி ஃபோல்டர்களில் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி பாதுகாக்க அனுமதிக்கிறது. 

யாராவது உங்களுக்கு செய்தி அனுப்பினால் அரட்டை லாக் செய்யப்பட்டிருக்கும்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பாஸ்வேர்டை உள்ளிடும்வரை, செய்திகளின் உள்ளடக்கம் மற்றும் யார் மெசேஜ் செய்கிறார்கள் என்ற விவரம் மறைக்கப்பட்டிருக்கும். 

இதுகுறித்து மார்க் ஜுகர்பர்க் தெரிவிக்கையில், "இந்த புதிய அம்சத்தை உங்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இது உங்களுக்கு மிக நெருக்கமான உரையாடல்களை இன்னும் ஒரு அடுக்கு பாதுகாப்பிற்குப் பின்னால் பாதுகாக்க உதவும். Chat Lock அம்சத்தைப் பயன்படுத்தும் ஒருவர், சேட் செய்து கொண்டிருக்கும் போது திடீரென வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறினால், அந்த அரட்டையை உடனடியாக லாக் செய்து விடுகிறது. பின்னர் உங்கள் சாதனத்தின் கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் மூலம் மட்டுமே மீண்டும் அணுக முடியும். அது தானாகவே அரட்டை உள்ளடக்கங்களை உடனடியாக மறைத்து விடும்", என்று கூறினார்.

எந்த அளவுக்கு வாட்ஸ் அப்பில் பயனர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் இருப்பதை உணர்ந்து பாதுகாப்பாக இருக்க முயற்சிக்கவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com