தமிழ்நாட்டில் 2,67,68,800 மின் நுகர்வோர்கள் உள்ள நிலையில் 2,00,61,094 நுகர்வோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது மொத்த மின் நுகர்வோரில் 74.94% மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மின் நுகர்வோர் வீட்டுக்கே சென்று மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகளையும் மின் வாரிய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 2811 மின் வாரிய அலுவலகங்களில் கடந்த மாதம் 28-ந்தேதி முதல் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மானியத்தைப் பெற மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு கூட தொடரப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இது தவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைத்தால் தான், மின்சார கட்டணம் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது. எனவே, மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.