நைஜீரியாவில் படகு மூழ்கி 76 பேர் பலி!

வெள்ள பாதிப்பு
வெள்ள பாதிப்பு

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 76 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இந்த ஆண்டு வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 27 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு சுமார் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதுவரை கனமழையால் 300 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இப்போது மீண்டும் கன மழை பெய்யத் தொடங்கி அந்நாட்டின் அனம்பரா என்ற பகுதியில் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் படகு மூலம் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அதில் ஒக்பாரு என்ற பகுதியில் 85 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, அந்த படகில் பயணித்த 76 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை 76 பேரின் உடல்கள் கைப்பற்றப் பட்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் அப்படகிலிருந்த 9 பேரை தேடும் பணியில் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு வீரர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com